To provide and promote Sustainable livelihood to the communities within the Kaluveli bio-region in Tamil Nadu,The Kaluveli is triangular watershed stretches from 10 km North West of Tindivanam to Marakkanam to the Auroville plateau, and covers an area of 740 sq. km. or 25,000 ha. During the monsoons runoff water reaches the Kaliveli floodplain (which is the lowest point within the watershed) via an intricate network of tanks and channels.
மரக்காணம் அருகே மூலிகை மருந்து தயாரிக்கும் பெண்களுக்கு பெருகும் வரவேற்பு
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.
விழுப்புரத்தில் பெண்களுக்கு மூலிகை பயிற்சி
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.
விகடன் நீங்கள் கேட்டவை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள பிச்சாண்டிக்குளம் மூலிகை-வனப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பார்வதி நாகராஜன் பதில் சொல்கிறார்.
”தமிழ்நாட்டில் பல காலமாக இருந்து வரும் மரப்பயிர்களில் தேற்றான்கொட்டை மரமும் ஒன்று. பேச்சு வழக்கில் ‘தேத்தாங்கொட்டை’ என்று அழைக்கப்படுகிறது. தேற்றான்கொட்டை உடலைத் தேற்றும் குணம் கொண்டதாலும், நீரைத் தெளிய வைப்பதாலும் ‘தேற்றான்’ என்று சொல்லப்படுகிறது. ஏரி, குளம்… போன்ற நீர்நிலைகளின் ஓரத்தில் இம்மரங்களை வளர்த்தால், அதில் இருந்து குளத்துக்குள் விழும் கொட்டைகளால் நீர் சுத்திகரிக்கப்பட்டு விடும். அதனால்தான், முற்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இம்மரத்தை நீர்நிலைகளுக்கு அருகில் நடவு செய்து வந்தார்கள்.
‘தேற்றான்கொட்டையால் நீர் தெளிவது போல்’ என்கிற உவமை, ‘அகநானூறு’ பாடலில் கூட வருகிறது. உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி அறிக்கையில், ‘இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும், ‘தேற்றான்கொட்டை மூலம் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் முறை சுகாதாரமானதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நீரைச் சுத்திகரிப்பதோடு, மருந்தாகவும் பயன்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத் தூண்டி உணவின் மீது ஆர்வத்தை அதிகரிக்கிறது. இதன் பழச்சதை, சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விதையை ஊறவைத்து, பசைபோல அரைத்துத் தடவினால், வீக்கம் குறையும். விதைப்பொடியை காலை, மாலை இருவேளைகள் தண்ணீரில் கலந்து குடித்து வர, மார்புச்சளி இளகும். தேற்றான் கொட்டை லேகியத்தைச் சாப்பிட்டால், இளைத்தவர்கள் தேறி விடுவார்கள். மோரில் கலந்து சாப்பிட்டால், நாள்பட்ட பேதி நிற்கும். வெள்ளைப்படுதல், மதுமேகம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், மூல நோய் போன்றவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில், இரண்டு தேற்றான் கொட்டைகளைப் போட்டு வைத்தால், இரண்டு மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இதன் கன்றுகள் எங்கள் ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கின்றன.”
https://www.vikatan.com/literature/agriculture/29516–2 ( பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர். )
அக்கரை அதிசயம்

‘இயற்கையே அதிசயம்தான்’ எனினும் ‘இயற்கையினுள் அரிதானவற்றையே அதிசயம்’ என்கிறோம். விழுப்புரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பார்வதி நாகராஜன் சராசரி பெண்தான் எனினும் அரிதானவற்றை பிறர் அறியும்படி செய்வதன் மூலம் அதிசயமாகிறார்.
படித்த கதை
ஆரம்ப கல்விக்கு அப்புறம் பக்கத்து ஊருக்குப் போய் படிக்க வீட்ல அனுமதிக்கலை. உண்ணாவிரதம் இருந்தும் பலனில்லை. பள்ளிக்குப் போய் எனக்கு நானே அட்மிஷன் கேட்டேன். விஷயம் தெரிஞ்சதும் அப்பாகிட்டே செம அடி. நான் படிக்க போயிட்டா அக்காவுக்கு வீட்ல வேலை கூடிடும்னு சொன்னாங்க. ‘தினமும் ஸ்கூல்ல இருந்து வந்ததும் வயலுக்கு எரு உரம் போடுறது என் பொறுப்பு’ன்னு சொல்லி அப்பாவை சம்மதிக்க வைச்சேன்.
பிளஸ் 1 வந்ததும் திரும்பவும் உண்ணாவிரத போராட்டம்; ஆறு நாள் போராட்டம் அப்பா மனசை கரைச்சது. ஆனா, கல்லுாரிக்கு போக மட்டும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
கற்ற கதை
எங்களோடது மூலிகை வைத்தியம் பார்க்குற குடும்பம்! பாட்டிக்கும், அம்மாவுக்கும் மூலிகை பறிச்சு தர்றது மூலமா எனக்கும் அடிப்படை சிகிச்சைகள் தெரியும். பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையத்துல பயிற்றுனரா வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் மூலிகைகளோட மகத்துவம் முழுமையா புரிஞ்சது; ‘பாரம்பரிய அறிவை நாம வீணாக்கிட்டு இருக்குறோம்’ங்கிற குற்றவுணர்வு வந்தது; எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன்.
வளர்ந்த கதை
இந்த பூமி எல்லா உயிர்களுக்குமானது; அப்போ, இதுல வளர்ற மூலிகைகளும் எல்லா உயிர்களுக்குமானதுதானே! என் அருகாமையில உள்ள பெண்களுக்கு மூலிகைச் செடிகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்தினேன். என்னோட பயிற்சியால மூலிகை நர்சரி, மூலிகை அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள்னு நிறைய உருவாக்கினாங்க. நான் ரொம்பவே திருப்தியா உணர்ந்த தருணம் அது!
அதிசயமான கதை
பல்லுயிர் வளங்களை நீடித்த வகையில் பயன்படுத்துறதுக்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பா 2018ல விருது கிடைச்சது. பெங்களூர்ல இருக்குற பூமி கல்லுாரியில, ‘சீனியர் பெலோஷிப்’ கிடைச்சது பெரிய அடையாளம். மனித உரிமைகள் துறையில முதுகலை பட்டம் வாங்கினது கவுரவம். குடும்பம், குழந்தைகள்னு பொறுப்புகள் கூடிட்டே இருந்தாலும் சத்தீஸ்கர், டில்லி உள்பட பல இடங்களுக்கும் போய் மூலிகை வளர்ப்பு, பயன்பாடுகள் சார்ந்து இன்னும் பயிற்சி தந்துட்டுதான் இருக்குறேன்.
ஆசைகள் 1000
* பயணம் பண்ணிட்டே இருக்கணும்!
* அரிதான மூலிகைகளை கண்டறியணும்!
* இன்னும் நிறைய கத்துக்கணும்.
மூலிகை வளர்ப்புதான் என்னோட உயிர்மூச்சே!
அ.கண்ணதாசன்தே.சிலம்பரசன்

‘`என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே மறுத்த குடும்பத்துலயிருந்து வந்த பொண்ணு நான். இன்னிக்கு பல மாநிலங்களுக்குப் போய் மூலிகைகள் பத்தி வொர்க் ஷாப்ஸ் நடத்துறேன். நானும், நம்ம மண்ணோட மூலிகைகளும் சேர்ந்து ஜெயிச்சுட்டு வர்றோம்’’ என்று தன்னம்பிக்கை நிரம்பப் பேசுகிறார் பார்வதி நடராஜன். மூலிகை வளர்ப்பு, பாதுகாப்பு, அது குறித்த பயிற்சிப் பட்டறைகள் என்று இயங்கிக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமம். வேலிகள் அமைக்கப்பட்ட தோட்டத்தின் நடுவே பெண்கள் பலர் ஆளுக்கொரு வேலையாகச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார் 42 வயதாகும் பார்வதி நாகராஜன்.
‘`நான் பிறந்தது, மரக்காணம் பக்கத்துல நல்லூர் கிராமம். நாலு பொண்ணு, ரெண்டு பையன்னு எங்க வீட்டுல மொத்தம் ஆறு பிள்ளைங்க. ரெண்டாவது பிள்ளையான என்னை, அஞ்சாவது முடிச்சதுமே ‘பொம்பளப் புள்ள படிச்சது போதும்’னு சொல்லி
நிப்பாட்டிட்டாங்க. ஒரு வாரம் சாப்பிடாம இருந்தேன். அப்படியும் எதுவும் நடக்கல. 6 கிலோ மீட்டர் தொலைவுல இருந்த ஸ்கூலுக்கு நானே போய், அங்க இருந்த ஒருத்தர் உதவியால ஒருவழியா ஆறாம் வகுப்புல சேர்ந்துட்டேன். வீட்டுக்குப் போனதும், ‘நானே வேலைக்குப் போய் பேனா, பென்சில், நோட்டெல்லாம் வாங்கிக்கிறேன்’னு சொன்னேன். அதுக்காக லீவு நாள்கள்ல சின்னச் சின்ன வேலைகளுக்குப் போனேன்’’ என்றவர், மூலிகையில்தான் தன் எதிர்காலம் இருக்கிறது என்பதை விரைவிலேயே உணர்ந்திருக்கிறார்.
‘`எனக்கு 6 வயசுவரை, எங்க ஊருல ‘பாவாடை படை’னு சொல்ற படை நோய் இருந்துச்சாம். வீட்டுல, என்னை காப்பாத்த முடியாதுனு நினைச்சுட்டாங்களாம். அப்போ எங்க அப்பாவோட அம்மா, பாட்டி அமிர்தாம்பாள் எனக்கு வைத்தியம் பண்ணி குணப்படுத்தியிருக்காங்க. பாட்டி, பாரம்பர்யமா இயற்கை வைத்தியம் பார்த்து வந்தவங்க வழிவந்தவங்க. அவங்ககூட மூலிகை சேகரிக்க போகும்போதுலாம், அதைப் பத்தி எனக்கு நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. எனக்கு ஏற்பட்ட படை நோயைக் குணப்படுத்திய ‘நீரின் மேல் நெருப்பு’ மூலிகை உட்பட, பல மூலிகைகளை நான் பார்த்து, தொட்டு, முகர்ந்து, கசக்கினு தெரிஞ்சுக்கிட்டேன். பாட்டிக்கு அப்புறம், அம்மா அதைச் செய்யத் தொடங்கினாங்க. அவங்களுக்கு மூலிகைகளை நான்தான் சேகரிச்சுட்டு வந்து கொடுப்பேன்’’ என்று சொல்லும் பார்வதி, இதற்கிடையில் தன் படிப்புக்கும் தொடர்ந்து போராடியுள்ளார்.
‘`பத்தாவது முடிச்சப்போ, பதினோராம் வகுப்புக்கு திண்டிவனம் போய் படிக்கணும் என்பதால வீட்டுல மறுத்தாங்க. நான் பிடிவாதமா திண்டிவனம் அரசு உதவி பெறும் பள்ளியில சேர்ந்துட்டேன். 12-ம் வகுப்பு முடிச்சப்போ, ஊர்ல கேட்குறவங்களுக்கு மூலிகை மருந்துகளைத் தயார்செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். பகுதி நேரமா சில வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ‘பொம்பளப் புள்ள எப்போ பார்த்தாலும் பஸ்ஸு ஏறி போறா…’னு ஊருல பேசினாங்க. வீட்டுல கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க, கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு எங்க வயல்ல விவசாய வேலை பார்த்தேன்’’ என்பவருக்கு, அப்போது தான் அவர் மனம்போலவே வேலை அமைந்திருக்கிறது.
‘`அந்த நேரத்துலதான் ‘பிச்சாண்டிக்குளம் மூலிகை பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையத்தில்’ வேலை கிடைச்சது. அங்க மூலிகை பயிற்சி அளிக்கிறதும், மூலிகை பயன்பாடுகள் பத்தி வெளியுலகத்துக்கு சொல்றதும்தான் என்னோட வேலை. மூலிகைகளே என் வாழ்க்கையாக ஆரம்பிச்சது அதிலிருந்துதான். 55 ஏக்கர் பரப்பளவில் பிச்சாண்டி குளம் பகுதியில காடுகளை வளர்த்த ஜாஸ் புரூக் என்ற வெளிநாட்டவருடைய அறிமுகம் கிடைச்சது, எனக்கு ரெண்டாவது ஊக்கமா இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை 21 வருஷமா பயிற்சியாளரா இருக்கேன்’’ என்ற பார்வதி, தன் பணிச் சூழலில் பல ஏழைப் பெண் களுக்கு ஏணியாக இருந்து வருகிறார்.
‘`நடுக்குப்பம் பகுதியில உள்ள பெண்களுக்கு தற் சார்பு வேலைவாய்ப்பை உருவாக்கணும் என்பதற்காக ‘கழுவெளி – பெண்களின் நிலையான வாழ்வாதார கூட்டமைப்பு’ங்கிற அமைப்பை கடந்த 10 வருஷத் துக்கு முன் ஏற்படுத்தினோம். இங்குள்ள எந்தப் பெண்ணும் தொழிலாளி இல்ல; அவங்களுக்கு அவங்களே முதலாளி. குழுவா இணைந்து வேலை செய்றாங்க. இயற்கை மூலிகைகள்ல இருந்து
பல வகையான பொருள்களை உற்பத்தி செய்யுறாங்க. நான், இந்தப் பெண்களுக்கு வழி காட்டியா இருக்கேன். இங்கு 60-க்கும் மேற் பட்ட மூலிகை தாவரங்களை வளர்க்குறோம். சுற்றுவட்டாரத்துல இயற்கையாவே விளைஞ்சு கிடக்குற மூலிகைகளையும் சேகரிக்குறோம்.
நாம இயற்கையிலிருந்து எவ்வளவு எடுக்கு றோமோ, அதே அளவு கொடுக்கவும் செய்யணும். அதனால நர்சரி மூலமா சுமார் 280 வகை தாவரங்களை உருவாக்கி விற்பனை செய்றோம். மூலிகைகள்ல இருந்து எண்ணெய், தைலம், லேகியம், பவுடர், ஜாம், உணவுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள்னு உற்பத்தி செய்றோம்’’ என்பவர், இதில் சில கொள்கைகளையும் வைத்திருக்கிறார்.
‘`நாங்க மூலிகை மருந்து தயாரிக்கும் செய் முறையை ரகசியமா வைக்காம, எல்லாருக்கும் சொல்லித் தர்றோம். இது அதிக மக்களை சென்றடையணும் என்பதுதான் எங்களோட நோக்கம். அதேபோல, இங்கு செய்யும் பொருள்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்றது இல்ல. அப்படி செய்தா அதிக லாபம் பார்க்கலாம். ஆனா, அதுக்கு அதிக அளவிலான மூலிகைகள் தேவைப்படும், மூலிகைகள் அழிவை நோக்கிச் செல்லும் என்பதால அந்த வழியை நாங்க தேர்ந்தெடுக்கலை. மனுஷங்க இயற்கைக்குக் கொஞ்சம் கொடுத்தா, இயற்கை நமக்கு பல மடங்கு கொடுக்கும். இந்த பூமியில எதுவும் மனுஷனுடையது இல்ல. எல்லாமே இயற்கை கொடுத்தது’’ என்று அழுத்தமாகப் பேசும் பார்வதி, தற்போது மனித உரிமைகள் தொடர்பான முதுநிலை படிப்புவரை முடித்துள்ளார்.
‘`பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு தடுக்கப்பட்ட நான், இன்னிக்கு கர்நாடகா, சத்தீஸ்கர்னு பல இடங்களுக்கு போய் மூலிகை குறித்த பயிற்சிகள் அளிக்கிறேன். பல கல்லூரி களுக்கும் அமைப்புகளுக்கும் சென்று மூலிகை உணவு தயாரிப்பு, மூலிகை மருந்து தயாரிப்பு, அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பு, மாடித்தோட்டம் அமைக்கிறது, மூலிகை பாதுகாப்பு பத்தி பேசுறேன். அதனால, ஆரம்பக்கால தடைகளுக்கு பெண்கள் தங்களைக் கொடுத்துடக் கூடாது. முட்டி மோதி வந்துட்டா, உலகம் நம்மை அரவணைச்சுக்கும்’’ என்று தன்னம்பிக்கை தரும் பார்வதிக்கு, ‘நீடித்த வகையில் இயற்கை வளத்தைப் பயன்படுத்தியும் பாதுகாத்தும் வருபவர்’ என்ற விருதை, இந்திய பயோடைவர்சிட்டி துறை 2018-ம் ஆண்டு வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கி யிருக்கிறது.
‘`எங்க கூட்டமைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் மூலிகைப் பொருள்களை அரசு கண்காட்சிகளிலும் கிராமப்புறங்கள்லயும், மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லி விற்பனை செய்றோம். என்னைப் பொறுத்தவரை முதல் மற்றும் கடைசி கடவுள் இயற்கை மட்டும்தான்” – பார்வதியின் வார்த்தை களில் அனுபவத்தின் அடர்த்தி!
https://www.vikatan.com/business/women/herbal-workshops-parvathi
மூலிகை தாவரம் மற்றும் மூலிகை மருந்துகள் உற்பத்தி என பலவகைகளில் அசத்தும் பெண்கள்.
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.
மூலிகை தாவரம், மூலிகை மருந்துகள் உற்பத்தி என பலவகைகளில் சாதனை படைத்து தேசிய விருது பெற்ற பெண்.
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.
जड़ी बूटियों की शक्तियों को पहचानने का वक्त [Tamilnadu’s Herbal Lady Raising Awareness about Herbs]
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.
Eco India: Meet the woman leading a herbal medicine & grassroots wellness renaissance in Tamil Nadu
பார்வதி நாகராஜன்( Parvathi Nagarajan) – மூலிகை தொழில் முனைவோர் பற்சியாளர்.